100-வது நாளை எட்டியது ராகுலின் பாதயாத்திரை - காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

100-வது நாளை எட்டியது ராகுலின் பாதயாத்திரை - காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரை (பாரத ஒற்றுமை யாத்திரை) கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

கேரளா, கர்நாடகா, தெலங்கானா உட்பட பல மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று இந்த யாத்திரை 100-வது நாளை எட்டியது. இதையடுத்து நேற்று மாலை செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.

நேற்று நடைபெற்ற யாத்திரையின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் உற்சாகமாக கலந்துகொண்டனர். அவருடன், இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவும் யாத்திரையில் கலந்துகொண்டார். அப்போது சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சிவெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்கூறும்போது, “நாம் ஒருங்கிணைந்து பயணித்தால் வெற்றிநிச்சயம். இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, இமாச்சல் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா வீரபத்ர சிங்,காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பங்கேற்றனர்’’ என்று கூறியுள்ளது.

மேலும் ராகுலுடன் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கும் புகைப் படத்தையும் ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை 100-வது நாளை எட்டி யுள்ளதையொட்டி காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு உள்ளிட்ட பலர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in