உரிய ஆதாரங்கள் இல்லாமல் ரூ.2000-க்கு மேல் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை

உரிய ஆதாரங்கள் இல்லாமல் ரூ.2000-க்கு மேல் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
Updated on
1 min read

உரிய ஆதாரங்கள் இல்லாமல், ஊர், பெயர் தெரியாமல் ரூ. 2000க்கு மேல் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தேர்தலில் கறுப்புப் பண புழக்கத்தை தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உரிய ஆதாரங்கள் இல்லாமல் அரசியல் கட்சிகள் ரூ.2000-க்கு மேல் நன்கொடை பெற தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, அடையாளம் தெரியாதவர்கள் பெயரில் ரூ.2000-க்கு மேல் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறு வதை தடை செய்ய வேண்டும். அதற்கேற்ப சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதுவரை அதுபோல் உரிய ஆதாரம் இல்லாமல் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதைத் தடை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆனால், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறப்படும் நன்கொடைகளுக்கு மட்டும் ஓரளவு தடை உள்ளது. அதுபோல் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை தருபவர்களின் விவரங்களை அரசியல் கட்சிகள் ஆவணப்படுத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 29சி பிரிவில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ரூ.2000 மற்றும் அதற்கு மேல் பெயர் தெரியாமல் வழங்கப்படும் நன்கொடை களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தேர்தலில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மேலும் கூறும்போது, ‘‘நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவை தேர்தல் களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே நன்கொடையில் வரிவிலக்கு அளிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in