ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ புதிய மனு - விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு நோட்டீஸ்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ புதிய மனு  - விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகர்கள் பயணிப் பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்பந்தம் போடப் பட்டது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக நடந்த பேரத்தில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் களுக்கு சுமார் ரூ.360 கோடி கைமாறியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, வழக்கு விசா ரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது. விசாரணையில் ஹெலி காப்டர் பேர ஊழலில் ஈடுபட்ட இடைத் தரகர்கள், நிறுவனங்கள், எஸ்.பி.தியாகியின் உறவினர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அண்மை யில் எஸ்.பி.தியாகியும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தொடர்ந்து அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை கலைத்து விடுவதற்கான ஆபத்து இருப்பதாகவும், எனவே அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி விபின் சங்கி, எஸ்.பி.தியாகி பதிலளிக்க உத்தரவிட்டார். இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜனவரி 3-ம் தேதி ஒத்தி வைத்தார்.

ஹெலிகாப்டர் பேர ஊழலில் கடந்த 9-ம் தேதி கைது செய்யப் பட்ட எஸ்.பி.தியாகிக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி ஜாமீன் வழங்கி அடுத்த விசாரணையை வரும் ஜனவரி 4-ம் தேதி தள்ளி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in