Published : 22 Dec 2016 10:37 AM
Last Updated : 22 Dec 2016 10:37 AM

கடலை மிட்டாய் ஊழல் வழக்கு: பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே விடுவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்காக கடலை மிட்டாய் மற்றும் பள்ளிக்கான உபகரணங்கள் வாங்கியதில் ரூ.206 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே மீது புகார் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த முண்டே, எந்தவொரு விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சவந்த், லஞ்ச ஒழிப்பு துறையிடம் பங்கஜ் முண்டே மீது கடந்த ஆண்டு புகார் அளித்தார். மேலும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை யினர் விரிவாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடலை மிட்டாய் மற்றும் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கு வதற்காக கோரப்பட்ட டெண்டரில் எவ்வித முறைகேடும் நடை பெறவில்லை. என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும் பங்கஜ் முண்டே மீதான இவ்வழக்கையும் இத்துடன் மூடுவதாக தெரிவித்துள்ளனர்.

பங்கஜா முண்டே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x