செக்யூரிட்டியாக நடித்து ஏடிஎம்மில் திருட்டு
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரம் பகுதியைச் சேர்ந் வர் பிள்ளா கொல்லாபுரி. இவர் அமலாபுரம் அரசு உயர்நிலை பள்ளி அருகே உள்ள ஒரு ஏடிஎம்மில் சனிக்கிழமை பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு செக்யூரிட்டி உடை அணிந்திருந்த ஒருவர், இந்த ஏடிஎம் பழுதாகி உள்ளதால் ஏடிஎம் கார்டை தன்னிடம் கொடுத்தால் பணம் எடுத்துத் தருகிறேன் எனக்கூறி உள்ளார். இதை நம்பி அந்த வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டை கொடுத்து அதன் குறியீட்டு எண்ணையும் கூறியுள்ளார்.
அந்த கார்டை ஏடிஎம் இயந்திரத் தில் செருகுவது போல் நடித்து, பின்னர் வேலை செய்யவில்லை எனக் கூறி கார்டை திருப்பிக் கொடுத்துள்ளார். அதை வாங்கி கொண்ட அவர் வேறு ஏடிஎம்முக்குச் சென்று கார்டை உபயோகித்துள்ளார். அப்போது பணம் வராததால் அருகில் உள்ள சம்மந்தப்பட்ட வங்கிக்குச் சென்று நடந்த விஷயங்களை கூறி, தனது ஏடிஎம் கார்டை ‘பிளாக்’ செய்யுமாறு விண்ணப் பித்துள்ளார்.
ஆனால், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 40, 000 சில நிமிடங்களுக்கு முன்னர், கொங்கன பல்லி என்ற இடத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் எடுக்கப் பட்டுள்ளதாக வங்கி ஊழியர் தெரிவித் துள்ளார். செக்யூரிட்டி போல் நடித்த அந்த நபர், வேறு கார்டை கொடுத்து ஏமாற்றியது பின்னர் தெரிய வந்தது.
