

மாற்றுத் திறனாளிகளின் மன உறுதிக்கு தாம் தலைவணங்குவதாக, அவர்களது உத்வேகத்துக்கு வெகுவாக புகழாரம் சூட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு, கடந்த 1992-ல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதியன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிந்துள்ளார்.
அதில், "மாற்றுத் திறன்கொண்ட சகோதரர்கள், சகோதரிகளின் மன உறுதிக்கு தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளும், சமத்துவமும் முழுமையாக நாடு தழுவிய அளவில் கிடைத்திட முழு வீச்சில் செயல்படுவோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.