

திரிபுரா சட்டப்பேரவையில் திரிண மூல் காங்கிரஸ் உறுப்பினர், சபாநாயகரின் செங்கோலைப் பறித்துக்கொண்டு ஓடியது பர பரப்பை ஏற்படுத்தியது.
திரிபுரா மாநில சட்டப்பேரவை யில் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, மாநில வனத் துறை அமைச்சர் நரேஷ் ஜமாதியா ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுத்த சபா நாயகருக்கு எதிராகவும் உறுப் பினர்கள் கோஷமிட்டனர். அப் போது, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சுதிப் ராய் பர்மன், திடீரென சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடினார்.
மரத் தடுப்புகளைத் தாண்டி சபாநாயகர் இருக்கை அருகே சென்ற பர்மன், அங்கிருந்த சபாநாயகருக்கான செங்கோலைப் பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் உறுப்பினர்கள் அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர். சபைக் காவலர்கள் பர்மனின் பின்னாலேயே வாயில் வரை சென்றனர்.
வெளியேறும் வாயில் வரை சென்றுவிட்ட பர்மனிடம் இருந்து சபைக் காவலர்கள் வலுக் கட்டாயமாக செங்கோலைப் பிடுங்கினர். இதனால் பேரவையை 3 மணி நேரத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
திரிபுரா சட்டப்பேரவையில் ஏற்கெனவே 2 முறை இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.