

இந்தியா-பாகிஸ்தான் உறவு இணக்கமாக இல்லாதபோதிலும், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
‘பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு பிறந்த நாள் வாழ்த் துகள். அவர் நீண்ட நாள் ஆரோக் கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்’ என, பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துச் செய்தியை நேற்று வெளியிட்டார்.
கடந்தாண்டு பிறந்த நாளின் போது, லாகூருக்கே சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நவாஸ் ஷெரிப்பை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியதோடு, அவரின் குடும்பத் திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.