

மக்களவையில் வெள்ளிக்கிழமை பூஜ்ய நேரத்தின்போது பாஜக உறுப்பினர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
ஐஎஸ்ஐஎஸ் (இராக், சிரியா இஸ்லாமிய தேசம்) அமைப்பில் மும்பையிலிருந்து 4 இளைஞர்கள் இணைந்துள்ளதாக வெளியான செய்திகள் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த விவகாரத்துக்கு விரைவாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆவதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படலாம். எனவே அங்குள்ள நிலைமையை மத்திய அரசு கூர்ந்து கண்காணித்து செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தை சமாளிக்க எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார் ஆதித்யநாத்.