

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நேற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
மக்களவை நேற்று காலையில் கூடியதும் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ரூபாய் நோட்டு பிரச்சினையை எழுப்பினார். ஆனால் அதற்கு மறுத்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், கேள்வி நேரம் தொடங்கு வதாக அறிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அனு மதிக்கக் கோரி கோஷமிட்டனர்.
சுமித்ரா எச்சரிக்கை
அப்போது, சுமித்ரா கூறும் போது, “என்ன இது? நான் உங் களை எச்சரிக்கிறேன். ரூபாய் நோட்டு விவகாரத்தில் விவாதம் நடத்த விரும்பினால் நடத்துங்கள். ஆனால், அவை நடவடிக்கை களைச் சீர்குலைக்க வேண்டாம். மீறுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சமாஜ்வாடி, தேசியவாத காங் கிரஸ் உறுப்பினர்களும் தங்கள் இருக்கையில் இருந்தபடியே அரசுக்கு எதிராக குரல் கொடுத்த னர். இதனால் தொடர்ந்து அமளி நிலவியதால் அவை ஒத்திவைக் கப்பட்டது.
சமீபத்தில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அவைக்கு வந்திருந்தார்.
காங்கிரஸுக்கு ஜேட்லி கேள்வி
மீண்டும் அவை கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, கறுப்புப் பணம் பதுக் கியவர்கள் அதை வெள்ளையாக் கிக்கொள்ள வாய்ப்பு வழங்கும் வகையில் வருமான வரிச் சட்டங் களில் திருத்தம் செய்திருப்பதாக குற்றம் சாட்டினர்.
அமளிக்கு நடுவே, பொது செலவுத் தொகையை ரூ.60 ஆயிரம் கோடியாக அதிகரித்துக்கொள்ள வகை செய்யும் 2-வது துணை மானிய கோரிக்கை நிறைவேற்றப் பட்டது. இதன்மீது நடைபெற்ற விவாதத்துக்கு மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்து பேசும்போது, “காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போது கறுப்புப் பணத்தை ஒழிக்க ஒரு நடவடிக்கையாவது எடுத்தோம் என அவர்களால் சொல்ல முடி யுமா?” என்றார். தொடர்ந்து கூச்சல் நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்…
மாநிலங்களவை நேற்று காலை யில் கூடியதும், சுகேந்து சேகர் ராய் (திரிணமூல் காங்கிரஸ்) கூறும்போது, “பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த 30 நாட்களில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். அவர் களுக்கு இந்த அவையில் இரங்கல் தெரிவிக்க வேண்டும்” என்றார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இதே கோரிக்கையை எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுத்து விவாதம் நடத்த முன்வர வேண்டும்” என்றார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்க முன்வந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.