

ஹைதராபாத் விமான நிலையத்தில் நேற்று ஒரு பயணியிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பழைய 500, 1000 நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு நாடு முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்த ஒரு பயணியிடம் சுங்க வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் ரூ.10,16,300 மதிப்பிலான பழைய 500, 1000 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.