ஆந்திரா | சாலை விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு

ஆந்திரா | சாலை விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு

Published on

குண்டூர்: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நூல்பூடி கிராமத்தை சேர்ந்த 23 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலைக்கு சென்றனர்.

சுவாமி தரிசனம் முடித்துவிட்டு ரயிலில், நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பாபட்லா ரயில் நிலையம் வந்தனர். அனைவரும் வாடகை வேனில் கிராமத்துக்கு புறப்பட்டனர்.

குண்டூர் அடுத்த ஜம்பனி எனும் இடத்தில் வேன், சாலை ஓரத்தில் இருந்த போலீஸ் எச்சரிக்கை இரும்பு பலகை மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் பாபட்லா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in