மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை: அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை: அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த நாளை (30-ம் தேதி) கடைசி தேதி. இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான அவ சரச் சட்டத்தை பிறப்பிப்பதற்கு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை அடுத்து, இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வரும். இதன் படி, 2017 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு 10-க்கும் மேற்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந் தால், ரூ. 10 ஆயிரம் அல்லது, கையில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 10 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கிக் கிளைகளில் பழைய நோட்டுகளை மாற்றும்போது, பொய் தகவல் அளித்தால் ரூ.5 ஆயிரம் அல்லது பழைய நோட்டுகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதமாக வசூலிக்கப்படும்.

கடந்த 1978-ம் ஆண்டிலும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தபோது, இதேபோன்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை அதிக எண்ணிக்கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக் கவும் அவசரச் சட்டம் வகை செய்யும். தடை செய்யப்பட்ட நோட்டுகளின் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி. இதுவரை செலுத்தப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட தொகை ரூ.14 லட்சம் கோடி. வரும் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு, எஞ்சிய ரூபாய் நோட்டுகள் சட்டத்துக்கு புறம்பானவையாகிவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in