Published : 10 Jul 2014 12:57 PM
Last Updated : 10 Jul 2014 12:57 PM

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு: நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண்ஜேட்லி

மத்திய பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, அதிக முதலீடுகளை ஈர்ப்பது, பொருளாதார வளர்ச்சி, பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட் செவ்வாய்க்கிழமையும் பொருளாதார ஆய்வறிக்கை புதன்கிழமையும் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து 2014-15ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:

இராக் உள்நாட்டுப் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந் துள்ளது. நாட்டில் பருவமழை பொய்த்துள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. கருப்புப் பணப் பிரச்சினை சாபக்கேடாக உள்ளது. இத்தனை தடைக்கற்களையும் உடைத்தெறிய சில துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டி யுள்ளது.

இப்போதைய பட்ஜெட் இந்திய பொருளாதார வளர்ச்சிப் பயணத்தின் ஒரு தொடக்கம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சி எட்டப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வரிச் சலுகைகள்

மத்திய பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 சி பிரிவின் கீழ் முதலீட்டுக்கான உச்ச வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

19 அங்குலத்துக்கும் குறை வான எல்சிடி டிவிக்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக் கப்பட்டுள்ளது. நுகர் பொருள்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ரூ.500-ஐவிட குறைந்த காலணி களுக்கான உற்பத்தி வரி 12-ல் இருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிகரெட் மீதான கலால் வரி உயர்வு

உடலுக்கு தீங்கிழைக்கும் புகையிலைப் பொருள்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. சிகரெட் மீதான வரி 72 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குட்கா மீதான வரி 60-ல் இருந்து 70 சதவீதமாகவும், பான் மசாலா வரி 12-ல் இருந்து 16 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. குளிர்பானங் களுக்கான கலால் வரி 5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

100 ஸ்மார்ட் நகரங்கள்

நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் அமைக்க ரூ.7060 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காப்பீடு, பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீட்டுக்கான வரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு ரூ.2,29,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் செயல்படுத் தப்படும். இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். ராணுவம் நவீனப்படுத்தப்படும். போர் அருங் காட்சியகம் அமைக்க ரூ.100 கோடியும் தேசிய போலீஸ் நினைவகம் அமைக்க ரூ.50 கோடியும் ஒதுக்கப்படும்.

நதிகள் இணைப்பு குறித்து ஆய்வு

தேசிய நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து ஆராய ரூ.100 கோடியும் கங்கையை தூய்மைப்படுத்த ரூ.2037 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் நதிக்கரைகள் ரூ.100 கோடியில் அழகுபடுத்தப்படும். சுற்றுலா துறையை ஊக்குவிக்க 9 விமான நிலையங்களில் இ-விசா வழங்கப்படும்.

பருவமழையை நம்பி யிருக்காமல் நவீன நீர்ப்பாசன முறைகளை கடைப்பிடிக்க பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சுவாட்ஸ் பாரத் அபியான் திட்டத்தில் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

ரூபாய் நோட்டில் பிரெய்லி

பார்வையற்றோர் நலனுக் காக புதிதாக 15 பிரெய்லி அச்சு ஆலைகளைத் தொடங்கவும் ஏற்கெனவே உள்ள 10 அச்சு ஆலைகளை நவீனப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு நிதி யுதவி அளிக்கப்படும். பார்வை யற்றோருக்காக ரூபாய் நோட்டு களில் பிரெய்லி எழுத்துகளும் அச்சடிக்கப்படும்.

பெண்கள் பாதுகாப்புக்கு ரூ.150 கோடி

சாலைகளில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ரூ.50 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். நகரங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்பயா நிதியில் இருந்து இந்த தொகை அளிக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காக ரூ.100 கோடியில் கிராமப்புற தொழில்முனைவோர் திட்டம் தொடங்கப்படும். கிராமப்புற வீட்டு வசதி நிதி (ஆர்.பி.எப்.) திட்டத்துக்காக தேசிய வீட்டுவசதி வங்கிக்கு (என்எச்பி) ரூ.8000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நீர்நிலைகளை மேம் படுத்த ரூ.2,142 கோடியில் ‘நீராஞ்சல்’ திட்டம் செயல்படுத் தப்படும். நாடு முழுவதும் நிலத்தடி நீர் மாசுபட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்க தேசிய ஊரக குடிநீர் திட்டத்தில் ரூ.3600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

தனிநபர் வருமான வரி விலக்கு விவரம்

விலை குறையும் பொருட்கள்

*சிஆர்டி வகை டிவி

*19 இஞ்ச்சுக்கு குறைவான எல்சிடி, எல்இடி டிவி-கள்

*ரூ.500 முதல் ரூ.1,000 வரையுள்ள காலணிகள்

*சோப்பு

*மின்னணு புத்தக வாசிப்புக் கருவிகள்

*டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட்

*ஆர்.ஓ. முறையிலான நீர் சுத்திகரிப்பான்கள்

*எல்.இ.டி விளக்குகள், அவை பொருத்தும் பட்டிகள்

*விளையாட்டு கையுறைகள்

*விலை உயர்ந்த கற்கள் (பட்டை தீட்டப்படாதவை).

*பிராண்டட் பெட்ரோல்

*தீப்பெட்டி

*ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் (மைக்ரோ)

*எச்ஐவி/எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்

*டிடிடீ பூச்சிக் கொல்லி மருந்துகள்

விலை உயரும் பொருட்கள்

*சிகரெட், பான்மசாலா குட்கா, மெல்லும் புகையிலை, ஜர்தா வாசனைப் புகையிலை.

*குளிர்பானங்கள்

*இறக்குமதி செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள்

* சிறிய எக்ஸ்-ரே கருவி

*பாதி உடைக்கப்பட்ட வைரங்கள்

*ரேடியோ கார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x