

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் 3 தெலுங்கு ஆளுநர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலகட்டத்தில் சென்னாரெட்டி, ரோசய்யா, வித்யாசாகர் ராவ் என 3 தெலுங்கு ஆளுநர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
இதில் சென்னாரெட்டி, ரோசய்யா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந் தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் ஆந்திர முதல்வராகவும் பதவி வகித்துள்ளனர். வித்யா சாகர் ராவ் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.
ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த ஊழல் வழக்கை விசாரிக்க சென்னா ரெட்டி அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.
அடுத்ததாக ஆந்திர முதல்வ ராக இருந்த ரோசய்யாவை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தமிழக ஆளுநராக நியமனம் செய்தது.
ரோசய்யாவுடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லுறவு இருந்தது. இவர் தொடர்ந்து 5 ஆண்டு காலம் தமிழக ஆளுநராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
இவரைத் தொடர்ந்து இப் போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யா சாகர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங் கானா மாநிலத்தை சேர்ந்த இவர் மகாராஷ்டிர மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.