

தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை மிரட்டி, நக்ஸல் இயக்கத்தினர் ஆண்டு தோறும் ரூ.140 கோடி அளவுக்கு கப்பத்தொகை பெறுகின்றனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், ஒப்பந்ததாரர்கள், போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு சட்டவிரோத சுரங்க மாபியாக்கள் உள்ளிட்டோரிடமிருந்து இடது சாரி தீவிரவாத அமைப்புகள் குறிப்பாக மாவோயிஸ்டுகள் மிரட்டி கப்பம் வசூலிக்கின்றனர்.
இத்தொகையை துல்லியமாகக் கூற முடியாது. இருப்பினும், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்புகள் நிறுவனத்தின் ஐடிஎஸ்ஏ ஆய்வு முடிவின்படி, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் ஆண்டுக்கு குறைந்தது ரூ.140 கோடி கப்பமாக வசூலிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது.