விசாகப்பட்டினம் திருப்பதி 2 அடுக்கு ரயில் ரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார்

விசாகப்பட்டினம் திருப்பதி 2 அடுக்கு ரயில் ரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

விசாகப்பட்டினம் - திருப்பதி இடையே 2 அடுக்கு விரைவு ரயில் சேவையை டெல்லியில் இருந்தபடி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆந்திராவில் குண்டூர் ரயில் நிலையத்தில் வை-பை வசதி, நடிகுடி காளஹஸ்தி இடையே புதிய ரயில்பாதைக்கான அடிக்கல், விஜயவாடாவில் டிக்கெட் பரிசோதகர்களுக்கான புதிய தங்குமிடம் உள்பட பல்வேறு ரயில்வே திட்டப் பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. இதனை டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். அப்போது விசாகப்பட்டினம் திருப்பதி இடையே 2 அடுக்கு விரைவு ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

விஜயவாடாவில் நடந்த இதற்கான விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஆந்திராவில் ரயில்வே சம்பந்தமான வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திராவின் 974 கி.மீ. தூர கடலோரப் பகுதிகளிலும் ரயில்வே வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும். விசாகப்பட்டினத்தில் புதிய ரயில்வே மண்டலத்தையும் மத்திய அரசு தொடங்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in