Last Updated : 02 Dec, 2016 10:40 AM

 

Published : 02 Dec 2016 10:40 AM
Last Updated : 02 Dec 2016 10:40 AM

பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத உ.பி. அதிகாரிகளின் ஊதியம் நிறுத்திவைப்பு

உ.பி.யில் பொதுமக்களின் புகார் கள் மீது நடவடிக்கை எடுக்காத நூற்றுக்கணக்கான அதிகாரிகளின் நவம்பர் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் பல்வேறு துறைகளில் பொது மக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை அளிப்பது வழக்கம். இவற்றை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அந்தந்த அலுவல தலைமை அதிகாரிகள் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை பெற்று வருகின்றனர். இதுதவிர மாநில அரசின் இணையதளத்திலும் குறைகள் மற்றும் புகார்களை அளிக்கலாம்.

இந்நிலையில் இவை அனைத் தையும் ஒருங்கிணைக்கும் வகை யில் முதல்வர் அகிலேஷ்சிங் யாதவால் ‘ஜன் சுன்வாய் (பொது மக்கள் குறைகேட்பு)’ என்ற பெயரில் ஓர் இணையதளம் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது. இதில் பதிவேற்றம் செய்யப்படும் குறைகள் மீது 15 நாட்களுக்குள் அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டு, சம்பந்தப்பட்டவர் களுக்கு பதில் அளிக்க வேண்டும் என அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு நடவடிக்கை எடுக் காத அலுவலர்களின் மாத ஊதியம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் களால் அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. தற்போது அம்மாநிலத்தில் தேர்தல் அறிவிக் கப்படவுள்ள நிலையில் அரசின் நடவடிக்கை தீவிரம் அடைந்துள் ளன. இதனால் தற்போது நூற் றுக்கணக்கான அதிகாரிகளின் நவம்பர் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் அலுவலக உதவியாளர் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வரை அடங்குவர். பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களை வரிசைப்படுத்தி அகிலேஷ், கடந்த மாதம் பட்டியல் வெளியிட்டார். இதில் சித்ரகுட், காஸ்கன்ச் ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன.

இது குறித்து ‘தி இந்து’விடம் காஸ்கன்ச் மாவட்ட ஆட்சியரும் தமிழருமான கே.விஜயேந்திர பாண்டியன் கூறும்போது, “இது போல் மத்திய, மாநில அரசு திட்டங்களை முறையாக அமல் படுத்தாத அதிகாரிகளின் ஊதி யத்தை நிறுத்தி வைக்கும் நட வடிக்கை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. ‘வேலை செய்யாதவர்களுக்கு ஊதியம் கிடையாது’ என ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் அரசுத் திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பது அதிகமாகியுள்ளது. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இலவச கழிப்பறை கட்டாத பஞ் சாயத்து செயலாளர்களின் ஊதியத்தையும் நான் இந்த மாதம் நிறுத்தி வைத்துள்ளேன்” என்றார்.

பரேலியில் 176, அலிகரில் 54 என நவம்பர் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளோர் பட்டியல் நீள்கிறது. அலிகரில் நகர, ஊரக காவல்துறை கண்காணிப்பாளர் கள், கூடுதல் ஆட்சியர், இரு துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர், மருத்துவ அதிகாரிகள், ஆய்வாளர் கள் என பலர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x