

ஒடிஸாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவர் சப்யசாச்சி பாண்டா கைது செய்யப்பட்டார்.
60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாண்டா கைது செய்யப்பட்டது, மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையில் மிக முக்கியமானதாகும். அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்திருந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
கந்தமால் கலவரத்துக்கு காரணமாக அமைந்த ஸ்வாமி லட்சுமணனாந்த சரஸ்வதி கொலை வழக்கில் பாண்டா முக்கிய குற்றவாளியாவார். பாதுகாப்பு படையினரை கண்ணி வெடி வைத்துக் கொலை செய்வது போன்ற பல்வேறு கொடூர நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அவரைப் பிடித்த மாநில காவல் துறையினருக்கு ஒடிஸா முதல்வர் பட்நாயக் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.