

கர்நாடக முதல்வர் சித்தராமையா வுக்கு அவரது பேஸ்புக் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் உள்ள கங்காவதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் ராய்க்கர். இவர் நேற்று முன்தினம் இரவு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பேஸ்புக் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுத்தார். அதில், “நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் உங்களைக் கொலை செய்துவிடுவேன்” என தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த கொப்பள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வெங்கடேஷ் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து கொப்பள் போலீஸார் சுனில் ராய்க்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 287, 206, 153, 565, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சுனில் ராய்க்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.