

நாடு முழுவதும் 20,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. வெளிநாடுகளிடம் இருந்து பெறப்படும் நன்கொடை விவகாரங்களில் விதிகளை மீறி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு நன்கொடை முறைமை சட்டத்தின்படி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், வெளிநாடுகளிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கு உள்துறை அமைச்சகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி பெறாத பட்சத்தில் வெளிநாட்டில் இருந்து நன் கொடை பெறுவதற்கு அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படும்.
அந்த வகையில் உள்துறை அமைச்சகம் அண்மையில் நடத்திய ஆய்வில் மொத் தம் உள்ள 33,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், 20,000 தொண்டு நிறு வனங்கள் இந்த சட்டத்தை மீறி செயல் பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், உள் துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று முறைப்படி தெரிவித்தனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கண்காணிக்கும் பணிகள் கடந்த ஓராண்டாகவே நடந்து வருவதாகவும், தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் உரிமங்கள் ரத்து செய்யப்படாத எஞ்சிய 13,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், 3,000 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே உரிமங்களை புதுப் பிக்க வேண்டி விண்ணப்பங்கள் வந்திருப் பதாகவும், அதில் முதல் முறையாக வெளி நாட்டு நன்கொடை முறைமை சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யும்படி 2,000 புதிய விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.