

ஏ1 மற்றும் ஏ பிரிவு ரயில் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் வைஃபை (Wifi) இன்டர்நெட் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த அறிவிப்பை, நாடாளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா வெளியிட்டார்.
மேலும், தபால் நிலையங்கள், மொபைல் போன்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், இன்டர்நெட் வழியாக பிளாட்ஃபார்ம் மற்றும் முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை பெறவும் வழிவகுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.
பயணிகள் போன், எஸ்.எம்.எஸ். மூலமாக உணவு தேவை குறித்து தகவல் அனுப்ப வழிவகை செய்யப்படும் என்றும், பயணிகள் உணவுத்தரம் குறித்த பின்னூட்டத்தை ரயில்வே துறைக்கு அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்படும் என்றும் ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.