சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018 முதல் கட்டாயமாகிறது

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018 முதல் கட்டாயமாகிறது
Updated on
1 min read

வரும் 2018-ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது.

இப்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் விரும்பினால் எழுதலாம் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில், மாநில தேர்வு வாரியங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயமாக இருப்பதுபோல், சிபிஎஸ்இ பொதுத் தேர்வை யும் கட்டாயமாக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கெனவே ஆதரவு தெரிவித் திருந்தார்.

இந்நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் வரும் 2017-18 கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in