

கறுப்புப் பண பதுக்கல் மற்றும் ஹவாலா முகவர்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் 40 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போலீஸார் உதவியுடன் அமலாக்கத் துறையின் சுமார் 100 அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் 6 இடங்கள், புவனேஸ்வரம், பாரதீப் நகரங் களில் தலா 2 இடங்களில் சோதனை நடைபெற்றது. இவை தவிர குவா ஹாட்டி உள்ளிட்ட நகரங்களிலும் சோதனை நடைபெற்றது.
இச்சோதனையில் கொல்கத்தா வில் டாக்டர் ஒருவரிடம் ரூ.10 லட்சம் புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வெளி நாட்டுப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பழைய நோட்டுகளுக்கு பதிலாக சட்டவிரோதமான வழியில் புதிய நோட்டுகளை மாற்றுதல், ஹவாலா மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்காக புதிய நோட்டுகளை சேர்த்து வைத்தல் உள்ளிட்ட முறைகேடுகள் இச் சோதனையில் கண்டறியப்பட்டன” என்றனர்.