Last Updated : 20 Jul, 2014 09:00 AM

 

Published : 20 Jul 2014 09:00 AM
Last Updated : 20 Jul 2014 09:00 AM

கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 10 பாலியல் பலாத்காரங்கள்- தொடரும் சம்பவங்களால் மாநில அரசுக்கு நெருக்கடி

பெங்களூரில் கடந்த ஒரு வாரத்தில் 6 வயது குழந்தை, கல்லூரி மாணவி, பயிற்சி கன்னியாஸ்திரி உட்பட 10 பேர் பாலியல் பலாத்காரம் செய்ய‌ப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், மாணவர்க‌ள், சமூக நல‌ அமைப் புகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்திருப்பதால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கும்பலால் காரில் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கடந்த திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக் கில் உடனே வழக்கு பதிவு செய்யாத பிரேசர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ரஃபிக் வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டார். மாணவியை பலாத்காரம் செய்ததாக ஹைதர் நசீர் (26), வாசிம் கான் (24), முகமது அலி (21) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

க‌ல்லூரி மாணவி பலாத்காரம் தொடர்பாக க‌ர்நாடக சட்டப் பேரவையில் எதிர்கட்சிகள் வெள்ளிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலக வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6 வயது சிறுமி பலாத்காரம்

இதனிடையே பெங்களூரில் உள்ள மாரத்தஹள்ளியை அடுத் துள்ள 'விப்ஜியார்' தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு, அங்கி ருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதையடுத்து பெற்றோருடன் போலீஸாரும், பள்ளி நிர்வாகமும் சமரசப் பேச்சு நடத்தினர். அப்போது பேசிய ஒரு மாணவியின் தாய், “அந்த குழந்தை ஜூலை 2-ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. மேலும் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி யில் இறங்கியுள்ளது” என்றார்.

பள்ளி நிறுவனர் பேசுகையில், “பள்ளி நிர்வாகம் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. அனைத்து ஊழியர்களும் விசார ணைக்கும் தயாராக இருக்கிறோம். அதற்குமுன் உடற்பயிற்சி ஆசிரியர் தான் அல்லது பாதுகாவலர்தான் இதைச் செய்தார் என்று தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்றார்.

ஒரே வாரத்தில் 10 பலாத்காரங்கள்

இந்நிலையில் பெங்களூரில் கடந்த ஒரு வாரத்தில்10 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், எம்.பி.ஷோபா கரந்தலாஜேவும் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். பெங்களூரில் அதிகரித்துவரும் பாலியல் பலாத் கார சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய உள் துறை அமைச்சகமும், மனித வள மேம்பாட்டுத் துறையும் உத்தரவிட்டுள்ளன.

கர்நாடக முதல்வர் சித்த ராமையா, உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் பெங்களூர் மாநகர போலீஸ் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார்.

சித்தராமையா பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, “பாலியல் பலாத்கார சம்பவங்க ளில் குற்ற வாளிகளை போலீஸார் விரைவில் கைது செய்வார்கள். இந்த வழக்கு களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். மேலும் வல்லு நர் குழு அமைக்கப்பட்டு, பாலி யல் குற்றங்களை குறைக்க நட வடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x