Last Updated : 19 Dec, 2016 08:50 AM

 

Published : 19 Dec 2016 08:50 AM
Last Updated : 19 Dec 2016 08:50 AM

5 கி.மீ. நடக்க முடிந்தால்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் சீட்: உத்தராகண்ட் காங்கிரஸ் நிபந்தனை

உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் 5 கி.மீ. தூரம் நடப்பவராக இருக்க வேண்டும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

உத்தராகண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடை பெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலை வர் கிஷோர் உபாத்யாய் கூறிய தாவது:

பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளா விட்டால் அரசியலில் நீண்டகாலத் துக்கு நீடித்து இருக்க முடியாது. குறிப்பாக, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலை யில், பொதுமக்களை சந்திக்க வேண்டியது மிகவும் அவசியம்.

எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டி யிட விரும்புகிறவர்கள் குறைந்த பட்சம் 5 கி.மீ. தூரம் நடக்கும் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் ஒரு இரவா வது தங்க வேண்டும் என்று விரும்புகிறோம். அப்போது தான், அப்பகுதி மக்களிடம் அவர் பரிச்சயமானவராக உரு வெடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதன்படி, மாநிலம் முழு வதும் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று யாத் திரை தொடங்குகிறது. வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பு வோர் இதில் குறைந்தபட்சம் 5 கி.மீ. பங்கேற்க வேண்டும். யாத்திரையின் முடிவில் ஒவ் வொருவரும் தங்கள் தொகுதி யில் உள்ள ஒருவரது வீட்டில் தங்க வேண்டும் என அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு அறிக் கையை அனுப்பி வைக்கும்.

உத்தராகண்ட் மக்கள் தொகை யில் 70 சதவீதம் பேர், அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவால் சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களில்தான் வசிக்கிறார் கள். எனவே, அரசியல் தலைவர்கள் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x