உலகிலேயே அதிக விபத்துகள் இந்தியாவில்தான் நடக்கின்றன: உச்ச நீதிமன்றம் கவலை

உலகிலேயே அதிக விபத்துகள் இந்தியாவில்தான் நடக்கின்றன: உச்ச நீதிமன்றம் கவலை
Updated on
1 min read

2014-ம் ஆண்டு 85,462 பேர் பலி

உலகிலேயே அதிக சாலை விபத்துகள் இந்தியாவில் நடப்பதற்கு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் 2.37 லட்சம் சாலை விபத்துகள் இந்தியாவின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடந் துள்ளன. இதில் 85,462 பேர் பலியாகினர். 2.59 லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த புள்ளிவிவரத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, உலகிலேயே அதிக சாலை விபத்துகள் இந்தியா வில்தான் நடந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் இந்தியாவில் ஒரு விபத்து நடப்பதாக அதில் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித் துள்ளது. சாலை விபத்துகளின் தலைநகராக இந்தியா இருப்பதை தடுக்க முடியும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விபத்துகள் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு கடந்த 15-ம் தேதி விசா ரித்து தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடை களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளின் உரிமங்களை அடுத்த ஆண்டு 31-ம் தேதிக்குப் பிறகு புதுப்பித்துத் தரக் கூடாது. மனித உயிர்கள் மிகவும் மதிப்பு மிக்கது. இந்தியாவில் சாலைகள் விரிவாக்கம் நடைபெறுகின்றன.

இந்த சாலைகள் உள்கட்ட மைப்பு விரிவாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். அதேநேரத்தில் இந்தியாவில் சாலை விபத்துகளை நிச்சயம் தடுக்க முடியும். நெடுஞ்சாலைக ளில் ஏற்பட்ட விபத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் 48, 768 பேரும், 2015-ம் ஆண்டில் 51,204 பேர் இறந்துள்ளனர்.

விபத்துகளுக்கு பெரும்பாலும் மது குடித்து விட்டும், போதை யிலும் வாகனங்கள் ஓட்டியதே முக்கிய காரணமாக இருந்திருக் கின்றன. மேலும் விரைவு சாலை களில் அதிவேகம், அலட்சியமாக வாகனங்கள் ஓட்டுவதும் விபத் துக்கு காரணமாக அமைகிறது.

நெடுஞ்சாலைகளில் மது எளிதில் கிடைப்பது, ஓட்டுநர்கள் மது அருந்த வாய்ப்பை ஏற் படுத்தி தருகிறது. எனவே, நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடை களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

சாலை விபத்துகளைத் தடுக்க, சட்டங்களை கடுமையாக அமல் படுத்த வேண்டும் என்றும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டு வதை தடுக்க சட்டத்தை முழுமை யாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் பல ஆண்டுகளாக தொடர்ந்து அவ் வப்போது உத்தரவுகள் பிறப்பித் துள்ளன.

வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் சாலை விபத்து களை தடுக்க வேண்டுமானால் சட்டங்களை சரியான முறையில் அமல்படுத்தினால்தான் முடியும். அப்போதுதான் மனித உயிர் களைக் காக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in