

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, ரொக்கப் பணமில்லா சமுதாயத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது டெபிட், கிரெடிட் கார்டு, இணையதளம், செல்போன் வழி வங்கி சேவை ஆகியவை மூலம் பணப்பரிமாற்றம் செய்யு மாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் டெல்லி யில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், டெபிட் கார்டு, இ-வாலட், ஆதார் எண் மூலம் பணம் செலுத்துதல் உள் ளிட்ட பல்வேறு முறைகளைப் பயன் படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தேசிய அள விலான பிரச்சாரம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தலைமையில் மாநில முதல்வர்கள் குழு அமைக்கப்பட் டுள்ளது. மின்னணு பணப்பரி மாற்ற முறையை சிறப்பாக அமல் படுத்தவும் பணப்பரிவர்த்தனை யில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் தேவையான ஆலோசனைகளை இக்குழு வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.