

வர்தா புயல் தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் கரையைக் கடக்கவுள்ளதால் கடலோரப்பகுதிகளுக்கு அதிகாரிகள் பொதுவான எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆந்திராவின் சூலூர்பேட்டை, கூடூர் பகுதிகளில் உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணப்பட்டிணம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா அருகே சூலூர்பேட்டை-சென்னை இடையே வர்தா கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தெற்குக் கடலோரப்பகுதிகள் புயற்காற்றின் தாக்கம் இருக்கும் என்றும், புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 70கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.