பேசும் படம்: பெங்களூருவில் சிக்கு புக்கு ரயில் போராட்டம்!

பேசும் படம்: பெங்களூருவில் சிக்கு புக்கு ரயில் போராட்டம்!
Updated on
2 min read

பெங்களூருவின் மையப் பகுதியான பசவேஸ்வரா சதுக்கத்தில் இருந்து 6.72 கிமீ தொலைவிலுள்ள ஹெப்பாலுக்கு உருக்கினால் ஆன மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.1,791 கோடி செலவாகும் என திட்ட வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் அமைக்க 800-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சாய்க்க வேண்டிய சூழல் உள்ளிட்ட காரணங்களால், இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

'உருக்கினால் மேம்பாலம் அமைப்பதில் சித்தராமையா உறுதியாக இருப்பது உள் நோக்கம் கொண்டது. இதை தடுக்க மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்'' மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில தலைவர் குமாரசாமி எச்சரித்திருந்தார்.

இத்தகைய சூழலில், உருக்கு மேம்பாலத்துக்கு மாற்றாக புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி 'சிட்டிசன்ஸ் ஃபார் பெங்களூரு' என்ற அமைப்பினர் சனிக்கிழமை வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர்.

மக்களின் கவனம் ஈர்த்த இந்தப் போராட்டத்துக்குப் பெயர் 'சுக்கு புக்கு பெக்கு ரயில் பயணம்'. இதன்படி, கன்டோண்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து ஒயிட்ஃபீல்டு ரயில் நிலையம் வரை சிறுவர்களின் சிக்கு புக்கு ரயில் விளையாட்டை நிகழ்த்தி போராட்டம் மேற்கொண்டனர்.

உருக்கு மேம்பாலத் திட்டத்துக்கு எதிராக, இதேபோல் பல்வேறு அமைப்பினரும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

படங்கள்:சுதாகர் ஜெயின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in