

மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா - இலங்கை இடையிலான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் வரும் சனிக்கிழமை (டிசம்பர் 31) டெல்லி யில் நடைபெறுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள், இலங்கை யின் கொழும்பு நகரில் வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் அமைச்சர்கள் அளவிலான கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளது.
மீனவர் பிரச்சினைக்கு விரை வான தீர்வு காணும் வகையில் ஒரு நடைமுறையை ஏற்படுத்த இந்தியாவும் இலங்கையும் தீவிரம் காட்டி வருகின்றன. இரு நாடுக ளும் கடந்த பல மாதங்களாக இது தொடர்பாக ஆலோசித்து வரு கின்றன.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று டெல்லி யில் கூறும்போது, “மீனவர் பிரச்சி னையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி, இந்தியா இலங்கை இடையிலான கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அட்டவணைப்படி, அமைச்சர்கள் அளவிலான கூட்டத்துக்கு முன்ன தாக, துறை செயலாளர்கள் அளவி லான கூட்டு நடவடிக்கை குழு (ஜேடபுள்யுஜி) கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் டெல்லியில் வரும் 31-ம் தேதி நடைபெறும். இதைத் தொடர்ந்து கொழும்பு நகரில் வரும் ஜனவரி 2-ம் தேதி அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடைபெறும்” என்றார்.