Published : 12 Dec 2016 08:34 AM
Last Updated : 12 Dec 2016 08:34 AM

10 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கார் வாங்கிய இளைஞர்கள்: வங்கியில் கொள்ளையடித்தது அம்பலம்

கிராமப்புற வங்கிக் கிளையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 மற்றும் 20 ரூபாய் தாள்களை கொள்ளையடித்து உல்லாசமாக செலவு செய்து வந்த 4 இளைஞர்களில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பேஹத் தாலுகாவுக்கு உட்பட்ட மலாக்பூர் உசைன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நஸிர், ராகேஷ், அப்சல் மற்றும் டிடு.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் நாடு முழுவதும் பணப் புழக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், இந்த 4 இளைஞர்களும் சேர்ந்து திடீரென புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

அதற்கான தொகையை 10 ரூபாய் நோட்டுகளில் செலுத்தி யுள்ளனர். தகவலறிந்த போலீ ஸார் இதுகுறித்த விசாரணையை தொடங்கியதும், 3 இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர்.

பிடிபட்ட நஸிரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், கடந்த நவம்பர் 19-ம் தேதி அருகில் உள்ள ஸ்டேட் வங்கியின் கிராமப்புறக் கிளையில் இருந்து 4 பேரும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10, 20 ரூபாய் நோட்டுகளை கொள்ளை யடித்தது தெரியவந்தது.

நஸிரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தையும், காரையும் போலீ ஸார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 3 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். இதுகுறித்து சஹாரன்பூர் மாவட்ட எஸ்பி ரஃபிக் அகமது கூறும்போது, ‘‘மலாக்பூர் உசைன் அருகே ஸ்டேட் வங்கியின் கிராமப்புற கிளை உள்ளது. பணம் இல்லாததால் இந்த வங்கி செயல்படாமல் இருந்தது. விவசாயிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்த கிளைக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

நவம்பர் 19-ம் தேதி நள்ளிரவு பணம் வந்துள்ளது. இதனை எப்படியோ தெரிந்துகொண்ட நஸிர் உள்ளிட்ட 4 பேர், மறுநாள் காலை வங்கி திறப்பதற்கு முன் பாக நள்ளிரவு நேரத்தில் லாவக மாக உள்ளே புகுந்து 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுக் கட்டுகளை மட்டும் கொள்ளையடித் துள்ளனர்.

கிராமப்புறங்களில் போலீஸா ருக்கு தகவல் கொடுக்க ஆங் காங்கே ஆட்கள் உண்டு. அண்மையில் இளைஞர்கள் சிலர் பழைய கார் ஒன்றை, முழுக்க 10 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வாங்கியது குறித்து, எங்களுக்கு ஒருவர் தகவல் கொடுத்தார் அதன் அடிப்படையில் நஸிரை மடக்கினோம். மற்ற 3 பேரையும் விரைவில் பிடிப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x