

தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை இடம் மாற்று வதற்காக ரிசர்வ் வங்கி சார்பில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கன் டெய்னர் லாரி ஒன்று, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, சத்தீஸ்கர் மாநிலம், பிலாய் நகரில் இருந்து, நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கி கருவூலத்துக்கு சென்றது.
கோண்டியா மாவட்டத்தில், தியோரி எல்லை சோதனைச் சாவடி யில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்டிஓ) இந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி னர். லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி எடை ஏற்றப் பட்டிருப்பதாகக் கூறி, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கன்டெய்னர்கள் 16 டன் வரை யிலான எடையை ஏற்றிச் செல்ல லாம். ஆனால் சம்பந்தப்பட்ட கன்டெய்னர் 21 டன் எடையை ஏற்றிச்சென்றது. கன்டெய்னர் முழுக்க 500, 1000 ரூபாய் நோட்டு கள் இருந்தன. அபராதத்தை வசூலித்தபின் கன்டெய்னரை அனுப்பலாம் என, நாக்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து கூறப்பட்ட பிறகே வாகனம் மேற் கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.