Published : 20 Nov 2022 04:16 AM
Last Updated : 20 Nov 2022 04:16 AM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிச.7-ல் தொடக்கம்

புதுடெல்லி: டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் நடைபெறும் நிலையில், டிசம்பர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையொட்டியும், புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் குறித்த நேரத்தைக் காட்டிலும் நீண்டு செல்வதாலும் இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதனால், இந்த குளிர்கால கூட்டத்தொடரை பழைய கட்டிடத்திலேயே நடத்திவிட்டு, பட்ஜெட் தொடரை புதிய கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவை டிசம்பர் இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகிலேயே ரூ.1,200 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வெகு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

குளிர்கால கூட்டத்தொடரில் 1500-க்கும் மேற்பட்ட பழைய வழக்கொழிந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரக லாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத் தில், “நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை 23 நாட்களில் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும். இந்தக் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்நோக்குகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x