

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினரால் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவரின் உடல் அங்கஹீனம் செய்யப்பட்டு கிடந்தது.
இது தொடர்பாக ராணுவம் நேற்று வெளியிட்ட செய்தியில், “காஷ்மீரில் மச்சல் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பணியில் இருந்த 3 இந்திய வீரர்கள், பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டுள்ள னர். இவர்களில் ஒருவரின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. பாகிஸ் தான் படையினரின் கோழைத் தனமான இச்செயலுக்கு கடும் பதிலடி தரப்படும்” என்று கூறப் பட்டுள்ளது.
இந்திய வீரரின் உடல் அங்க ஹீனம் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்படுவது, கடந்த அக்டோபர் 29-ம் தேதியில் இருந்து இது இரண்டாவது முறையாகும்.
இதனிடையே வடக்கு காஷ்மீரில் நடந்த மோதல் சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர்.
பண்டிப்போரா மாவட்டம், ஹஜின் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே ஜம்மு மாவட்டத்தில் இந்தியப் பகுதிக் குள் ஊடுருவ முயன்ற பாகிஸ் தானியர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டார்.
ஆர்.எஸ்.புரா செக்டார், சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று காலை அடர்ந்த பனிக்கு மத்தியில் ஊடுருவ முயன்ற இவரை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.