

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து விவா திக்க, மக்களவையில் இன்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது. பழைய நோட்டு களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிர்க் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரி வித்து வருகின்றனர். பரபரப்பான சூழ்நிலையில் நேற்று நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. மறைந்த 9 மக்களவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மக்களவை கூடியதும், ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கூறுகையில், ‘‘ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உட்பட பலதரப் பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்தப் பிரச்சினையை முக்கியமாக மக்களவையில் எடுத்துரைப்போம்’’ என்றனர்.
ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க செய்ததால் பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் தீவிரமாக விவாதிக்க காங்கிரஸ் உட்பட 13 எதிர்க்கட்சியினர் முடிவு செய் துள்ளன. இதனால் மக்களவையில் இன்று காரசார விவாதம் நடை பெறும் என்று தெரிகிறது.
மாநிலங்களவையில் அரசு பதில்
மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசினார். அவர் பேசும்போது, ‘‘ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த முடிவு முன் கூட்டியே கசிந்ததில் பலர் ஆதாயம் அடைந்துள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்து அரசு சார்பில் எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எதிர்க்கட்சி உறுப்பினரின் குற்றச்சாட்டு அடிப்படை இல்லா தது. நாட்டு நலனைக் கருத்தில் கொண்டுதான் 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த முடி வெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தீவிரவாத செயல்களுக்கும் இந்த கறுப்புப் பணம் பயன்படுத் தப்படுகிறது. அதை ஒடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் எந்த அரசியலும் இல்லை. நாட்டு நலனுக் காகவே அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை நீண்ட காலத் துக்கு பலன் அளிக்கும். கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்கும் சக்தி ஒருவருக்கு இருக் கிறது என்றால், அது பாஜகவுக்கும் நரேந்திர மோடிக்கும்தான் உண்டு.
அரசின் இந்த நடவடிக்கைக்கு சாதாரண மக்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பணவீக்கம் குறையும் வரி குறையும். நாடே இந்த முடிவை வரவேற்கிறது. ஆனால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஊழல் செய்பவர்கள்தான் அதிர்ச்சியில் உள்ளனர். அரசின் முடிவை எதிர்ப் பவர்கள், கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்கும் நடவடிக் கைக்கு எதிரானவர்களா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.