மகாராஷ்டிராவில் லாரி மீது கார் மோதி 9 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் லாரி மீது கார் மோதி 9 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்​தின் பண்டாரா மாவட்​டத்​தில் உள்ள நாக்​பூர்​-​ராய்ப்​பூர் தேசிய நெடுஞ்​சாலை​யில் நேற்று அதிகாலை கார் ஒன்று வேக​மாக சென்று கொண்​டிருந்​தது. பிம்பல் காவ் என்ற இடத்​துக்கு அருகே சென்​ற​போது, லாரி​யின் ​மீது மோதியது. இதில் காரின் முன்​பகுதி உருக்​குலைந்து போனது.

இந்த கோர விபத்​தில் காரில் பயணம் செய்த 5 பெண்​கள், 3 சிறுவர்​கள் என 8 பேர் சம்பவ இடத்​திலேயே பரி​தாப​மாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படு​கா​யம் அடைந்​தனர். அவர்​கள் மீட்கப்பட்டு அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு சேர்க்​கப்​பட்​டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்​தார். இதனால் உயி​ரிழப்பு 9 ஆக உயர்ந்​தது.

மகாராஷ்டிராவில் லாரி மீது கார் மோதி 9 பேர் உயிரிழப்பு
பிரிக்ஸ் நாடுகளின் எழுச்சியால் ‘கச்சா எண்ணெய் கூட்டணி’ சாத்தியமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in