நேபாளத்தில் தேர்தலை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையருக்கு அழைப்பு

நேபாளத்தில் தேர்தலை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையருக்கு அழைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நேபாளத்தில் 275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களைக் கொண்ட ஏழு மாகாண பேரவைக்கான தேர்தல் நேபாளத்தில் வருகிற 20-ம் தேதிநடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு சர்வதேச பார்வையாளராக ராஜீவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அங்கு நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகளில் ராஜீவ் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்து கொள்ள உள்ளது. இந்த குழு நவம்பர் 18 முதல் 22-ம் தேதி வரையில் நேபாளத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை பார்வையிட உள்ளது.

காத்மண்டு மற்றும் அதை ஒட்டி நடைபெறும் வாக்குப் பதிவு மையங்களை ராஜீவ் குமார் நேரில் பார்வையிடவுள்ளார். இதேபோன்று இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை நேரடியாக பார்வையிட சர்வதேச நாடுகளின் தேர்தல் ஆணையர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in