ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே 1000, 500 ரூபாய் நோட்டுகள் வாபஸ்: பிரபலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்

ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே 1000, 500 ரூபாய் நோட்டுகள் வாபஸ்: பிரபலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்
Updated on
1 min read

‘ஊழலற்ற இந்தியாவை உருவாக் கவே, 1000, 500 ரூபாய் நோட்டு களைத் திரும்பப்பெற முடிவெடுக் கப்பட்டது’ என, பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய அரசின் நட வடிக்கையை திரைப்படத் துறை யினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருப்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா பிரபலங்களான கரண் ஜோஹர், ரஜினிகாந்த், அஜய் தேவ்கன், கமல்ஹாசன், நாகார் ஜுனா, ரிதேஷ் தேஷ்முக், சுபாஷ் கய், சித்தார்த் மல்ஹோத்ரா, கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும், நேர்மையாக வரி செலுத்துவோரும் கொண்டாட வேண்டும் என, நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு, பிரதமர் மோடி பதில் அளிக்கும்போது, ‘நாட்டின் நேர்மையான குடிமக்களின் நலனுக்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

மேலும் பல்வேறு பிரபலங்களின் வாழ்த்துகளுக்கு ட்விட்டர் மூலம் பதில் அளித்த பிரதமர் மோடி, ‘ஊழல், கருப்புப் பணம் ஒழிந்தால் மட்டுமே, வளர்ச்சியில் புதிய உயரங்களை நம்மால் எட்ட முடியும். நாட்டின் முன்னேற்றத்தை மந்தமாக்கும் கருப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க இந்நடவடிக்கை உதவும். வளமான, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றுகூடி உழைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

மோடிக்கு ராகுல் கேள்வி

ஆனால், ‘2000 ரூபாய் நோட்டு களை புதிதாக வெளியிடுவதன் மூலம், கருப்புப் பணம் பதுக்கப் படுவதை எப்படி தடுத்துவிட முடியும்’ என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘கருப்புப் பணத்தை வெளிநாடு களிலும், ரியல் எஸ்டேட்டிலும் பதுக்கிய நிஜமான குற்றவாளிகள் கமுக்கமாக இருக்கின்றனர். ஆனால், அன்றாடக் கூலித் தொழி லாளர்கள், விவசாயிகள், சிறிய வியாபாரிகள், குடும்பப் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாட்டின் சாதாரண மக்களைப் பற்றி மோடிக்கு எப்போதும் கவலையில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது’ என, ட்விட்டரில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in