

மத்திய அரசின் நோட்டு நடவடிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசு ரூ.500, 1000 தடை செய்து எடுத்துள்ள நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது.
அதேவேளையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விளக்கி மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நவ.25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசு வாதம்:
கறுப்புப் பணத்துக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது, அதற்கு இணையான பாதிப்புகள் ஏற்படுவது இயல்பே என மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாதிட்டார்.