

கர்நாடக சட்டப்பேரவையில் கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு வியாழக்கிழமை மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பழம்பெரும் கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவால் சென்னையில் கடந்த 22-ம் தேதி காலமானார்.
தனது 6-வது வயதிலேயே இசைப் பயணத்தை தொடங்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர்.
இந்நிலையில், இன்று கர்நாடக சட்டப்பேரவையில் பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.