

மக்களவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளிப்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அமித் ஷா அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட், அனைத்து இந்தியர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றி, அவர்களின் மனவலி களையும் நீக்கி உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. இதற்காக நிதியமைச் சர் அருண் ஜேட்லிக்கு நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சியில், காலி கஜானா, சின்னாபின்னமாக்கப்பட்ட பொருளாதாரம், வறட்சி, மந்தமான வளர்ச்சி, நடப்புக்கணக்கு பற்றாக் குறை மற்றும் நம்பிக்கையற்ற உணர்வு ஆகியவற்றுக்கு பழகி விட்டோம்.
இன்றைய பட்ஜெட்டின் அறிவிப்பு கள், வளர்ச்சி விகிதத்தை 5.5 முதல் 5.9 சதவீதமாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது அடுத்த இரு வருடங்களில் மேலும் உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேளாண்மை வளர்ச்சி மற்றும் உற்பத்தி துறைக்கு பெரிய உத் வேகத்தை அளித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கிராமங்களை இணைத்து விவசாய வருமானத்தைப் பெருக்கும்.