

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதன் மூலம் கருப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் மற்றும் தீவிரவாதம் ஒழியும் எனக் கூறுவது பொருளற்றது.
பிரதமர் நரேந்திர மோடி அவரே குறிப்பிட்டது போல, கருப்புப் பணம் இந்தியாவுக்கு வெளியே, வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் அந்தந்த நாட்டு கரன்சியாக பதுக்கப்பட்டு இருக்கின்றன.
புதிதாக, 2000, 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோ கிப்பதன் மூலம், எதிர்காலத்தில் எந்த வகையிலும் கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுத்துநிறுத்திவிட முடியாது.
அதேபோல், தீவிரவாதிகள் எப் போதும் ரொக்கமாக பணத்தைப் பரிமாறிக்கொள்வதில்லை. அவர் கள் மின்னணு பணப் பரிமாற்ற முறையையே பின்பற்றுகிறார்கள் என்பது அனைவருமே அறிந்தது.
உரிய காலக்கெடுவுக்குள் 1000, 500 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட் டாலும், பினாமி பரிவர்த்தனைகளை தடுக்க எவ்விதமான முன்னெச் சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை யும் இல்லை.
நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, உற்பத்தி பற்றாக்குறை என, பொருளாதார ரீதியாக பல்வேறு விஷயங்களில் மோடி அரசு தோல்வியைத் தழுவி யிருப்பதால், அதனை மறைக் கவே இந்நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது’ எனக் கூறப் பட்டுள்ளது.
திருமண சீசன் சமயத்தில் இப் படிப்பட்ட முடிவை அமல்படுத்தி யிருப்பதை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சுட்டிக் காட்டியுள்ளார். திருமண செல வினங்கள் போன்றவற்றுக்கு 1000, 500 நோட்டுகளை அனுமதிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.