

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 88-வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அத்வானி, இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவர். நாட்டுக்காக அயராது பாடுபட்டவர். எங்கள் அனைவருக்கும் அவரே முன்னுதாரணம். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்நாளில், அவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் இறைவன் அருள வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 8 1927-ல் கராச்சியில் பிறந்தார் அத்வானி. 1998 முதல் 2004-ம் ஆண்டுவரை மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் துணை பிரதமராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.