

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.கே.சானு இந்த ஆண்டுக்கான பஷீர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கத்தாரில் உள்ள மலையாளிகளின் சங்கமான 'ப்ரவாஸி தோஹா' மற்றும் மறைந்த எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட கொச்சியைச் சேர்ந்த 'ப்ரவாஸி அறக்கட்டளை' ஆகியவை இணைந்து இந்த விருதை 20வது ஆண்டாக வழங்குகின்றன.
இதுகுறித்து ப்ரவாஸி அறக்கட்டளையின் தலைவர் பாபு மதெர் கூறும்போது, "இந்த விருது ரூ.50,000 பண முடிப்பையும் சிற்பக் கலைஞர் நம்பூதிரி வடிவமைத்த சிற்பம் ஒன்றும் பரிசாகக் கொண்டதாகும். இது வருகிற நவம்பர் மாதம் தோஹாவில் எழுத்தாளர் எம்.கே.சானுவுக்கு வழங்கப்பட உள்ளது" என்றார்.