மும்பையில் பணமின்றி சிகிச்சை தர மறுப்பு மருத்துவரின் பிடிவாதத்தால் குழந்தை பலி

மும்பையில் பணமின்றி சிகிச்சை தர மறுப்பு மருத்துவரின் பிடிவாதத்தால் குழந்தை பலி
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் பணம் செலுத் தாத காரணத்தால் குறை பிரசவத் தில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால் குழந்தை பரிதாபமாக பலியானது.

கடந்த 8-ம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த போதிலும், பெட்ரோல் பங்க்குகள், மருத்துவமனைகளில் இதை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதிஷ் சர்மாவின் மனைவி கிரண் கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு டிசம்பர் 7-ல் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 9-ம் தேதியே பிறந்தது. இதையடுத்து அப்பகுதி யில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

குறைப் பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமானால், ரூ.6,000 முன்பணம் செலுத்த வேண்டும் என்று பெண் மருத்துவர் கூறியுள்ளார். அப்போது, தன்னிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகளை தர சர்மா முன்வந்தபோது அதை ஏற்காமல் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். இதனால், அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

இதுதொடர்பாக, சர்மா போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in