Published : 14 Jul 2014 11:33 AM
Last Updated : 14 Jul 2014 11:33 AM

ஹைதராபாத்துக்கு கூட்டு போலீஸ் படை: மத்திய அரசின் யோசனையை தெலங்கானா நிராகரித்தது

தெலங்கானா, ஆந்திரா போலீஸாரை இணைத்து கூட்டு போலீஸ் படையை ஏற்படுத்தி, தலைநகர் ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கலாம் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் யோசனையை தெலங்கானா மாநில அரசு நிராகரித்துவிட்டது.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலம், கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல் பாட்டுக்கு வந்தது. இந்த இரு மாநிலங்களின் பொதுத் தலைநகர மாக 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் இருக்கும். இந்த கால கட்டத்துக்குள் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு புதிய தலைநகரம் ஏற்படுத் தப்படும். அதுவரை ஹைதராபாத் தில் சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்படுவதை மாநில ஆளுநர் அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத் மாநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தெலங்கானா, ஆந்திரப் பிரதேச போலீஸாரை இணைத்து கூட்டு படையை அமைக்கும் யோசனையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 4-ம் தேதி தெரிவித்தது. அதோடு, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது தெலங்கானாவைச் சேர்ந்தோர் தாக்குதலை நடத்தினால், அதைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்து மாறும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இது தொடர்பாக உரிய சட்டத் திருத்தத்தை கொண்டு வருமாறு தெலங்கானா மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த யோசனைகளை தெலங்கானா மாநில அரசு நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் தெலங்கானா மாநில அரசு கூறியுள்ளதாவது: “தெலங் கானாவின் ஒருங்கிணைந்த பகுதி ஹைதராபாத். இங்கு சட்டம் ஒழுங்கை பராமரிப்பது தெலங் கானா மாநில போலீஸாரின் கடமை யாகும். எனவே, மற்றொரு மாநில (ஆந்திரப் பிரதேசம்) போலீ ஸார் இங்கு செயல்படுவதை அனுமதிக்க இயலாது.

ஆந்திரப் பிரதேச மக்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அது பற்றி விசாரிக்கவும் டிஜிபி அலுவலகத்தில் தனி அதி காரியை நியமிக்க ஏற்பாடு செய்ய வுள்ளோம்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.பி. ஜிதேந்தர் ரெட்டி கூறும்போது, “இந்த விவகாரத்தை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரியுள்ளோம். இது போன்று சட்டம் ஒழுங்கை பரா மரிக்கும் பணியை ஆளுநரிடம் அளித்தால், அது தெலங்கானா மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இந்த யோசனையை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

ஹைதராபாத்தில் ஆந்திரப் பிரதேச மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இதுவரை நடைபெற்றதாக தகவல் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x