குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டி?

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டி?
Updated on
1 min read

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளது. இதற்கான உத்தேச வேட்பாளர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள ரிவாபா, 2016-ம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வருகிறார்.

குஜராத் மாநில பாஜக தலைவர்களுடன் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வார்கள் எனத் தெரிகிறது. அடுத்த சில நாட்களில் 182 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் என்று தெரிகிறது. 2017 தேர்தலில் பாஜக 99 இடங்களையும் காங்கிரஸ் 77 இடங்களையும் பெற்றது. அதன் பிறகு கட்சித் தாவல், விலகல் போன்ற காரணங்களால் பாஜகவின் பலம் பேரவையில் 111-ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in