

65 வயது பெண் பயணி ஒருவரின் ஆடைகளை களைந்து சோதனையிட்டதாக ரயில்வே பெண் டிக்கெட் பரிசோதகர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளனர்.
கடந்த 25-ம் தேதி இப்பெண் மும்பை புறநகர் ரயிலில், அந்தேரி ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார். இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்த இப்பெண் தவறுதலாக முதல்வகுப்பு பெட்டி யில் ஏறிவிட்டதாக கூறப்படுகி றது. இவரது பயணச் சீட்டை பரிசோதித்த, 2 பெண் பரிசோதகர் கள் அவரை மீரா ரோடு ரயில் நிலையத்தில் இறக்கி யுள்ளனர். தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். தன்னிடம் ரூ.25 மட்டுமே உள்ளதாக அப்பெண் மணி கூறியபோது, அவரை திட்டியுள் ளனர். மேலும் அப்பெண் சொல் வது உண்மைதானா என்பதை உறுதி செய்வதற்காக அவரது ஆடைகளை களைந்து சோதனை யிட்டார்களாம். புகாரின் பேரில், முதல்கட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தர விட்டது. குற்றச்சாட்டுக்கு முகாந் திரம் இருப்பதால் சம்பந்தப் பட்ட 2 பெண் பரிசோதர்களும் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே மண்டல மேலாளர் சைலேந்திர குமார் கூறினார்.