

நீரில் மூழ்கிய அனில், உதய் ஆகிய இருவரும் இச்சம்பவத்துக்கு முன்னதாக கன்னட சேனல்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அப்போது அனில் கூறும்போது, “எனக்கு ஓரளவுக்கு நீச்சல் தெரியும். இருந்தாலும் உயரத்தில் இருந்து குதிப்பது இதுவே முதல்முறை. இதனால் படபடப்பாக இருக்கிறது. என்ன நடக்குமென்று எனக்குத் தெரியாது.கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்றார்.
இதுபோல் உதய் கூறும்போது, “இப்போதுதான் இங்கு வந்துள் ளேன். இந்த ரிஸ்க்கான காட்சிக் காக பெரிதாக பயிற்சி எடுக்க வில்லை. நாங்கள் மூன்று பேரும் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதிக்க வேண்டும்.
அதுமட்டும்தான் தெரியும். இவ்வளவு உயரத்தில் இருந்து குதிப்பதால் பயமாக இருக்கிறது. இதுபோன்ற சண்டைக்காட்சியில் முதல்முறையாக நடிக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட முன்னணி கன்னட நடிகர் சிவராஜ் குமார், “இத்தகைய சண்டை காட்சியில் நடிக்கும் நடிகர்களும் முன்பே யோசித்து நடித்திருக்க வேண்டும். இப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் முன்னால் கன்னட திரையுலகமே குற்றவாளியாக நிற்கிறது. இந்த எச்சரிக்கை மணியை மனதில் வைத்து, எதிர்க்காலத்தில் நடிகர்கள் பொறுப்புடன் நடிக்க வேண்டும்” என்றார்.